Monday, October 15, 2012

பாத பூஜை


           ஸ்ரீ பாத பூஜையின் சிறப்பு அம்சங்கள்
  அன்பு எல்லோருக்கும் ஓர் சிறந்த பொருள்
  அது வெளிப்படுவது மனம்இதற்கு செய்முறை-நாடி நரம்புகள்
அந்த நாடி நரம்புகள் இதயத்திற்குள் நுழைந்து
வெற்றிடமான காற்றுக்குள் [மனதிற்குள்] புகுந்து
விளையாடுகின்றன.இதற்கு தேவையான கருப்பொருள்
இதயம்,மூளை,நரம்பு மண்டலங்கள்.
   நாம் ஒவ்வொரு முறையும் சிந்திக்கும்போது தவறுகள்
நடந்து விடுகின்றன.இந்த தவறுகளை மேல் எழுந்தவாரியாக
பார்க்காமல்- தத்துவஞானிகள்,தீர்க்கதரிசிகள் எல்லாம் இதை
பிரபஞ்ச மாசு என்கிறார்கள்      
   பிரபஞ்ச மாசு என்பது மனிதனுடைய தவறான எண்ணமும்
செயல்களும்.இதுதான் செய்வினை என்னும் செயல்பாட்டு சக்தி.
   மனித மனம் நல்லது நடக்கும்,கெட்டது நடக்கும் என்பதை
அறிந்துகொண்டு வாழத்தெரிய வேண்டும்.மனிதனின் எதிர்மறையான
[நெகட்டிவ்] எண்ணங்களே செய்வினை என்று சொல்லப்படும்
தீயசக்தி.இதை மாற்றி அமைப்பதுதான் தெய்வீகசக்தி.
செய்வினை[அ]பிரிவினை என்பது உலகத்தில் எதுவும் இல்லை
   இவை எல்லாம் பிரபஞ்சமாசு .மனித எல்லையையும் தாண்டி
இறப்பு,பிறப்புக்கு அப்பாலும் தெய்வம்,கடவுள் என்று சொல்லப்படுவது
உண்மையே,இந்த உண்மைதான் பாதபூஜை எனும் கரு.
   உன் கருவில் இருக்கும் ரகசியங்களையும் கடந்து உங்களுடைய
பிரச்சனைகளையும் தீர்க்கும் தெய்வீக சக்தியே இந்த பாதபூஜையின்
சிறப்பு [இரகசிய] அம்சங்கள்
   உடனடி தீர்வுக்கான பரிகாரம் என்பது, உங்கள் உடலில் உள்ள
72000 நாடி நரம்புக்களை புனிதமடையச் செய்வதே அற்புதங்கள்.
[மிராஃக்கிள்].உங்களை நீங்களே பார்ப்பதும்,நேசிக்க வைப்பதும்
தான் எங்களுடைய செயல்.
   ஆதி காலம்தொட்டே இந்த அற்புதங்கள் நடந்து கொண்டு
இருக்கிறது.மனிதர்களுக்கு கோயில், இயற்கை வழிபாடுகளின்
சக்தியாகவே இருந்துகொண்டுயிருக்கிறது
   குறைபாடுகள் உள்ள சக்தியை சரிசெய்வது என்பதுதான்
பாதபூஜை.இதற்கு பெயர்தான் பாத தரிசனம்.பண்டைய காலத்தில்
இருந்தே மனிதனை மனிதமனம் வணங்கும் காலமாகவே சித்தரிக்
கப்பட்டுள்ளது.குரு-கடவுளின் சக்தி படைத்தவர் என்றும்,அவரை
நாம் பார்த்தால்[அ]கும்பிட்டால்[அ]ஆசிர்வதிக்கப்பட்டால்[அ]அவருக்கு
நாம் பூஜைகள் செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் எல்லாம்
கிடைக்கும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு.
   நம்முடைய முன்னோர்கள் கூறிய வம்சாவழி தொடர்புகளுடனேயே
இன்றும் வாழ்கிறோம்.அது தவறு.மேலை நாட்டு அறிஞர்கள் எல்லாம்
மனம் தான் கடவுள் என்கிறார்கள்.அந்த மனம் எங்கே?எப்போதும்
இருக்கிறதா?[அ]ஏதாவது ஒன்றுடன் செயல்படுகிறதா?